திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2021 3:20 PM IST (Updated: 3 Aug 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.

தாம்பரம்,

சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சினேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. பிரமோத் தனது மனைவியிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்து கொண்டு சேலையூர் ரங்கநாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

நேற்று முன்தினம் இரவு பிரமோத், செல்போனில் தொடர்பு கொண்டு சினேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சினேகா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சினேகாவின் பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக சேலையூர் போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சினேகாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் இதுபற்றி தாம்பரம் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

Next Story