டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி


டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 3 Aug 2021 10:03 AM GMT (Updated: 3 Aug 2021 10:03 AM GMT)

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய முற்பட்டதால் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மின்சாரம் தாக்கியது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு தட்டான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 26). இவர், தனியார் மருந்து கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் தனது நண்பரை வண்ணாரப்பேட்டையில் இறக்கி விட்டு வருவதற்காக புளியந்தோப்பு டிமலஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், இவரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் பார்த்தசாரதி, மதுபோதையில் இருப்பது தெரிந்தது.

மின்சாரம் தாக்கியது

எனவே மது போதையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி வந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி திடீரென அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி அருகில் சென்ற மின்சார கம்பியை பிடித்தார்.

இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட பார்த்தசாரதியை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story