கோவையை அலங்கோலப்படுத்தும்் சுவரொட்டிகள் கிழித்து அகற்றம்
கோவையை அலங்கோலப்படுத்தும்் சுவரொட்டிகள் கிழித்து அகற்றம்
கோவை
கோவை நகரை அலங்கோலப்படுத்தும் சுவரொட்டிகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழித்து அகற்றப்பட்டது. மீறி சுவரொட்டிகள் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அலங்கோலமாகும் கோவை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை நகரை அழகுபடுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நகரை அலங்கோலமாக்கும் வகையில் மேம்பால தூண்கள், மக்கள் கூடும் இடங்கள், பொது மற்றும் தனியார் சுவர்களில் எந்தவித அனுமதியும் பெறாமல் சுவரொட்டி ஒட்டுவது அதிகரித்து வருகிறது.
இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டிகளை அதிகாரிகள் கூலிக்கு ஆட்களை நியமித்து கிழித்து அகற்றி வருகிறார்கள்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் மணிவண்ணன் கூறியதாவது
கடும் நடவடிக்கை
மேம்பால தூண்கள் உள்பட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி அலங்கோலப்படுத்துகிறார்கள். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் எங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
நாங்கள் சுவரொட்டிகளை அகற்றினால் மீண்டும் அதிகாலையில் வந்து ஒட்டுகிறார்கள். இதனால் நகரின் அழகுகெடுகிறது.
சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள தகவலின் அடிப்படையிலும், ஒட்டியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அபராதம்
இது குறித்து தன்னார்வலர்கள் கூறும்போது, கோவை நகரில் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் தொடர்புடையவர்களை கண்டறிந்து மாநகராட்சி 500 சதவீதம் அபராதம் விதிக்க வேண்டும்.
அதிகாலையில் சுவரொட்டி ஒட்டுபவர்களை ரோந்து செல்லும் போலீசார் கண்காணித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வழக்குப்பதிவு
இது குறித்து கோவை நகர போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது
சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டி நகரை அழகை கெடுப்பது டன், சிலர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கும் வழிவகுக்கிறார்கள்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story