கழுத்தை பிடித்து கீழே தள்ளப்பட்ட போண்டா வியாபாரி சாவு


கழுத்தை பிடித்து கீழே தள்ளப்பட்ட போண்டா வியாபாரி சாவு
x
தினத்தந்தி 3 Aug 2021 8:24 PM IST (Updated: 3 Aug 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

மது அருந்த பணம் கேட்டு நடந்த தகராறில் கழுத்தை பிடித்து மகன் கீழே தள்ளியதில் போண்டா வியாபாரி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி

மது அருந்த பணம் கேட்டு நடந்த தகராறில் கழுத்தை பிடித்து மகன் கீழே தள்ளியதில் போண்டா வியாபாரி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போண்டா வியாபாரி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரம் ஊராட்சியில் உள்ள தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவரது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்து விட்டார்.

இவர்களுக்கு சிவா, தேவகுமார் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். குணசேகரன் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

வீட்டின் அருகாமையில் போண்டா கடை வைத்து விற்று காலம் கழித்து வருகிறார். இந்த நிலையில் இளைய மகன் தேவகுமார் மாம்பாக்கத்தில் டிரைவராக உள்ளார். நேற்று பகலில் ஆரணிக்கு வந்த அவர் தந்தை குணசேகரனிடம் மது அருந்த பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த தேவராஜ் தந்தை என்றும் பாராமல் அவரை கழுத்தை பிடித்து கீழே தள்ளியுள்ளார். மயங்பகி விழுந்த அவரை காப்பாற்ற அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

108 ஆம்புலன்சில் பணியாளர்கள் வந்து பரிசோதித்ததில் குணசேகரன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
 தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த குணசேகரின் உடலை மீட்டனர். இது தொடர்பாக குணசேகரனின் மூத்த மருமகள் மைதிலிடம் புகாரை பெற்றனர்.

எப்படி இறந்தார்?

இறந்து கிடந்த குணசேகரனுக்கு உடலில் எந்தவிதமான ரத்த காயங்கள் ஏதும் இல்லை. எனினும் அவர் கீழே தள்ளப்பட்டதால் இறந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க உள்ளனர்.

Next Story