சேவூர் பகுதியில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சேவூர் பகுதியில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சேவூர்,
சேவூர் பகுதியில் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆடி பதினெட்டாம் பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் பரவலாக மழை பெய்யும். கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் பெய்யும் மழையால் அங்கு உற்பத்தியாகும் காவிரி ஆறு ஆடிமாதத்தில் பெருக்கெடுத்து ஓடி வந்து தமிழகத்தை செழிப்பாக்குகிறது. ஆடி மாதம் காவிரி பெருக்கெடுத்து வருவதால் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆடியிலே பெருக்கெடுத்து வரும் காவிரியை காவிரிக்கரை மற்றும் தமிழகத்தில் நதிக்கரைகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக விளங்கும் தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் பெருகி, மேன்மேலும் மனிதகுலம் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வாழ வழி செய்ய இயற்கையை வழிபட்ட நாளே ஆடி பதினெட்டாம் பெருக்கு.அதன்படி கொங்கு மண்டல கிராமங்களில் நேற்று ஆடி பெருக்கு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நம் முன்னோர்கள் காலத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது கிராம சூழல்கள் நகரங்களாக மாறி வருவதால் அடிப்பெருக்கு வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆடிப்பெருக்கு தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமபகுதி விவசாயிகள் விளை நிலங்களில் தானியங்களை பயிரிடுவர்.ஆடி மாதத்தில் பயிரிட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். இதை தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என பழமொழி சொல்வார்கள். ஆனால் தற்போது மழை குறைவால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று சேவூர் பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாண்டை அணிந்து கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.கொரோனா தொற்றால் ஊரடங்கு கடைபிடித்ததால் பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள கிராமகோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். பிறகு வீடுகளில் சமையல் செய்து படயலிட்டு முன்னோர்களை வழிபட்டனர்.
தூரி நோன்பி
ஆடிமாதத்தில் பொதுவாக காற்று விசை அதிகமாக இருக்கும் என்பதனை ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்றனர் நமது முன்னோர். இயற்கையோடு ஒன்றி கலந்து வாழ்ந்த மனிதன், இயற்கையோடு குதூகலித்தும் வந்தனர்.அவ்வகையில் ஆடி மாதத்தில் ஊரில் பொதுவாக உள்ள மரத்திலேயோ, வீட்டின் முற்றத்திலேயோ, ஊஞ்சல் என்னும் தூரி கட்டி ஆடி மகிழ்ந்தான். முன்னோர்கள்ஆற்றங்கரையோரம், குளக்கரையோரம் ஆலமரத்தில் தூரிகட்டி ஆடி குழந்தைகளுடன் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்து வந்தனர். நாளடைவில் கிராமப்புறங்களில் நாகரிகம் வளர வளரவும் அது மட்டுமல்லாது மழை குறைவாலும் பாரம்பரிய தூரி விளையாட்டு படிப்படியாக குறைந்தது.ஆனால் இன்றும் பழமை மாறாமல் சேவூர் காமராஜ் நகர், தண்டுக்காரன்பாளையம் கிராமம் ராமியம்பாளையம் உள்பட பல கிராம பகுதிகளில் ஆலமரத்தில் தூரி கட்டி குழந்தைகள் தூரி விளையாடி ஆடிப்பெருக்கை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
---
Related Tags :
Next Story