அச்சரப்பாக்கத்தில் புதரில் எரிந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு


அச்சரப்பாக்கத்தில் புதரில் எரிந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 9:46 PM IST (Updated: 3 Aug 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கத்தில் புதரில் எரிந்த நிலையில் கிடந்த பிணம் மீட்பு.

அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையையொட்டி, வீராணம் சாலையோரம் புதர்களுக்கிடையில் எரிந்த நிலையில் பிணம் கிடப்பதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தடயவியல் துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். பின்னர், போலீசார் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த உடலை கைப்பற்றி செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பிணம் ஆணா? பெண்ணா? யார் அவர்? கொலை செய்து எரித்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story