வடமதுரை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


வடமதுரை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 9:48 PM IST (Updated: 3 Aug 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடமதுரை:
வடமதுரை அருகே எலப்பார்பட்டி பிரிவில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் எரியோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 29), விஜயகுமார் (28) என்பதும், கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ராசுக்குட்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 
இதேபோல் எலப்பார்பட்டி காளியம்மன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த சேகர் (36) என்பவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

Next Story