மடத்துக்குளம் அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மடத்துக்குளம் அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
போடிப்பட்டி, ஆக.4-
மடத்துக்குளம் அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காகித ஆலை
மடத்துக்குளத்தையடுத்த ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் காகித ஆலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது. இதில் மறுசுழற்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பண்டல்கள் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று பரவியது. இதனையடுத்து தாராபுரம் பகுதியிலிருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் தண்ணீர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
காரணம் என்ன?
மறுசுழற்சிக்காக பழைய காகித பண்டல்களை ஏற்றி வந்த லாரி ஒன்றின் டீசல் டேங்க் எதிர்பாராத விதமாக வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் ஏராளமான காகித பண்டல்கள் தீயில் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story