மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு நண்பருடன் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே நண்பருடன் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
மூங்கில்துறைப்பட்டு
புதுமாப்பிள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல் சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் தணிகாசலம்(வயது 38). இவருடைய மனைவி மகாலட்சுமி(32). இவர்களது மகன் ஹரிதேவ்(5).
அதே பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கார்த்திக்(25). இவருக்கு கடந்த மாதம் புன்னகை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
தணிகாசலமும், கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்களின் குடும்பத்தினர் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.
தூக்கில் பிணமாக தொங்கினர்
இந்த நிலையில் மேல் சிறுவள்ளூர் ஏரிக்கரை சாலையோர கிணற்றின் அருகில் உள்ள மரத்தில் ஒரே கைலியில் தணிகாசலமும், கார்த்திக்கும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி அவர்கள் வடபொன்பரப்பி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதேபோல் தணிகாசலம், கார்த்திக் ஆகியோரின் உறவினர்களும் அங்கு திரண்டனர்.
போலீசார் விசாரணை
பின்னர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இருவரின் உடல்களையும் கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் தணிகாசலம், கார்த்திக் ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை?. இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பருடன், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story