திண்டுக்கல்லில்,ஆடிப்பெருக்கையொட்டி கோட்டை குளத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு


திண்டுக்கல்லில்,ஆடிப்பெருக்கையொட்டி கோட்டை குளத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
x
தினத்தந்தி 3 Aug 2021 10:39 PM IST (Updated: 3 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், ஆடிப்பெருக்கையொட்டி கோட்டை குளத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல்:
ஆடிப்பெருக்கு நாளில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் காவிரி தாயை நினைத்து பெண்கள் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் கோட்டை குளத்தில் நேற்று பெண்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதையொட்டி நேற்று மாலையில் குடும்பத்துடன் ஏராளமான பெண்கள் அங்கு வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள், வாழை இலையில் தேங்காய், பழம், காப்பு அரிசி, மஞ்சள் கயிறு வைத்து எலுமிச்சைபழத்தில் விளக்கேற்றி காவிரித்தாயை வழிபட்டனர். அதன் பிறகு எலுமிச்சைபழ விளக்கை வாழை இலையில் வைத்து கோட்டை குளத்தில் மிதக்க விட்டனர். அதைத்தொடர்ந்து மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொண்டனர்.

Next Story