ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடிபெருக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது


ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடிபெருக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
x
தினத்தந்தி 3 Aug 2021 10:46 PM IST (Updated: 3 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடிபெருக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

ஊட்டி,

ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆடிபெருக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

ஆடி பெருக்கு சிறப்பு பூஜை

ஆண்டுதோறும் அம்மன் கோவில்களில் ஆடிபெருக்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி பெருக்கையொட்டி பக்தர்கள் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால், நேற்று ஒருநாள் மட்டும் மூடப்பட்டது.

இதனால் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வில்லை. கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கோவில் வாசலில் நின்றபடி சாமி தரிசனம் செய்து சென்றனர். அங்கு திருநீர் வைக்கப்பட்டு இருந்தது. ஆடி பெருக்கையொட்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 

காலை 11 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்தார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துராமன் மற்றும் பூசாரிகள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

பக்தர்கள் ஏமாற்றம்

அதேபோல் பொக்காபுரம் மாரியம்மன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவிலில் நேற்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை. நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆடி பெருக்கன்று 3 கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழக அரசு உத்தரவின்படி கொரோனா பரவலை தடுக்க நீலகிரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பெருந்திட்ட தூய்மை பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

தூய்மை பணிகள்

இதுகுறித்து மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் முத்துராமன் கூறும்போது, ஊட்டி மாரியம்மன் கோவில், எல்க்ஹில் முருகன் கோவில், காந்தல் மூவுலக அரசி அம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பட அனைத்து அறநிலைத்துறை கோவில்களிலும் தொடர்ந்து 3 நாட்கள் தூய்மை பணிகள் நடக்கிறது.

கோவில் கோபுரம், வளாகம், சிலைகள் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மஞ்சள், கிருமிநாசினி தெளித்தும் சுத்தம் செய்யப்படுகிறது. இன்று (புதன்கிழமை) முதல் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.


Next Story