மனநலம் பாதித்த இளம்பெண் பலாத்காரம் முதியவர் கைது
பொள்ளாச்சி அருகே மனநலம் பாதித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மனநலம் பாதித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பலாத்காரம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். மனநலம் பாதிக்கப்பட்ட இவரை காணவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.
அப்போது அங்கிருந்த ஒரு வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் அந்த வீட்டிற்குள் இருப்பதும், அவரை முதியவர் ஒருவர் பலாத்காரம் செய்வதும் தெரியவந்தது.
தப்பி ஓடினார்
இதையடுத்து உறவினர்கள் மற்றும் பலர் அந்த வீட்டின் முன்பு திரண்டு, கதவை தட்டினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர், பின்வாசல் கதவை திறந்து அதன் வழியாக வெளியே தப்பி ஓடினார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.
அதில், ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 72) என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது.
முதியவர் கைது
இதை தொடர்ந்து போலீசார் தலைமறைவான முருகனை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோபாலபுரத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் முருகன் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கேரளாவுக்கு தப்பிச் செல்ல அங்கு நிற்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story