சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை


சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2021 11:27 PM IST (Updated: 3 Aug 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் போக்குவரத்து பணிமனை அமைக்க பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் நடந்த ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டத்துக்கு தலைவர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அணி மாவட்ட தலைவர் ஜெயபால், திருப்பத்தூர் சட்டமன்ற அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிங்கம்புணரியில் உள்ள சிறுவர் பூங்கா தற்போது மதுபிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, சிங்கம்புணரியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க கோரிக்கை விடுப்பது, சிங்கம்புணரியில் இருந்து சிவகங்கைக்கு கீழவளவு, ஏரியூர், மல்லாக்கோட்டை வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story