வாணியம்பாடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


வாணியம்பாடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 3 Aug 2021 11:53 PM IST (Updated: 3 Aug 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலைமையில் நடை்பெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.ஆர்.செந்தில் முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் கலந்துகொண்டு, கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முகக்கவசம் அணிவது, கை கழுவும் முறைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். அதைத் தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முடிவில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். 

இதில் வாணியம்பாடி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம், வருவாய் துறையினர், நகராட்சி துறையினர், டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story