ஓச்சேரியில் மகளை கொன்று தாய் தற்கொலை; விவசாயி கைது


ஓச்சேரியில் மகளை கொன்று தாய் தற்கொலை; விவசாயி கைது
x
தினத்தந்தி 3 Aug 2021 11:53 PM IST (Updated: 3 Aug 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஓச்சேரியில் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த நடுசித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (35). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 31-ந்தேதி மகளை கொன்றுவிட்டு வெண்ணிலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து வெண்ணிலாவின் அண்ணன் கலைவாணன் அவளூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், எனது தங்கையை தயாளன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த வெண்ணிலா மகளை கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். 

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, தயாளனை நேற்று கைது செய்தனர். 

Next Story