ஆற்காடு அருகே; 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ‘குவா’ ‘குவா’


ஆற்காடு அருகே; 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ‘குவா’ ‘குவா’
x
தினத்தந்தி 3 Aug 2021 11:59 PM IST (Updated: 3 Aug 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கூத்தம்பாக்கம் காலனியை சேர்ந்த விஜயசாரதியின் மனைவி லாவண்யா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை 3:30 மணியளவில் பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டு பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேலூர் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. ஆற்காடு புறவழிச்சாலை அருகே அதிகாலை 4:40 மணியளவில் சென்றபோது 108 ஆம்புலன்சிலேயே லாவண்யா ஆண்குழந்தையை பிரசவித்தார். 

மருத்துவ உதவியாளர் சூரியபிரகாஷ் பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும், சேயும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story