மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 போலீசார் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த 2 போலீசார் படுகாயம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான 2-ம் நிலை காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று காலை பெண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு ஆகியவை தொடங்கியது. இங்கு பாதுகாப்பு பணிக்காக வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த போலீசார் தனியார் திருமண மகாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கல்லல் காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் ஜெயபால், மாணிக்கம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் தேர்வு நடைபெறும் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளம் அருகில் வந்தபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதனால் ஜெயபால், மாணிக்கம் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவருக்கும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story