வாணியம்பாடி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆடிப்பெருக்கு ரத்து
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோவில்களில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவது வழக்கம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி, புல்லூர், ஆலங்காயம் தீர்த்தம் மற்றும் ஆண்டியப்பனூர் ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக நடைபெறும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த நிலையில், கொடையாஞ்சி கிராமத்தில் ஆடிப்பெருக்கு நடைபெறாத நிலை இருந்த போதிலும், அருகில் இருக்கக்கூடிய கிராமமக்கள் பாலாற்றில் புனித நீராடி அருகில் இருக்கும் கோவில்களின் வெளிப்புறத்தில் இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பி அனுப்பப்பட்ட பக்தர்கள்
தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள புல்லூர் கனக நாச்சியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
மேலும் பக்தர்கள் யாரும் அணை பகுதிக்கும், அதனை சுற்றியுள்ள கோவில் பகுதிக்கும் போக முடியாமல் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆலங்காயத்தை அடுத்த தீர்த்தம் பகுதியிலும், கோவிலுக்கும் யாரும் போக முடியாதபடி தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.
காவலூர் பகுதியில் உள்ள கோவிலிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆடிப்பெருக்கை யொட்டி பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்காததால் வேதனையுடன் திரும்பி சென்றனர். இதனால் ஆடிப்பெருக்கு களையிழந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story