கள்ளக்காதலி வெட்டிக் கொலை


கள்ளக்காதலி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 4 Aug 2021 1:29 AM IST (Updated: 4 Aug 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை வெட்டிக் கொலை செய்த முதியவர் போலீசில் சரணடைந்தார்

தரகம்பட்டி
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள சேவாபூரை சேர்ந்தவர் மணி நாயக்கர் (வயது 75). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பழனியம்மாளுக்கும் (55) பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.சமீப நாட்களாக மணிநாயக்கரிடம் பழனியம்மாள் சரிவர பேசுவதில்லையாம். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த பழனியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மணி நாயக்கர் பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story