காவிரி ஆறு பகுதியில் இறந்து கிடந்த முதியவர்
காவிரி ஆறு பகுதியில் முதியவர் இறந்து கிடந்தார்
குளித்தலை
தஞ்சாவூர் மாவட்டம் காரக்கோட்டை தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி ஆத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிச் சென்ற அவர் கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து செத்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story