கொரோனா விதிமுறைகளை மீறிய நகைக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


கொரோனா விதிமுறைகளை மீறிய நகைக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 4 Aug 2021 1:54 AM IST (Updated: 4 Aug 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கொரோனா விதிமுறைகளை மீறிய நகைக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நெல்லை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நெல்லை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் சுகாதார துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் நெல்லை பகுதியில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த ஒரு நகைக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story