கலெக்டர் ஆய்வு
விருதுநகர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர்,
விருதுநகரில் ரூ.379 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டுமானப்பணி நடைபெற்று வரும் இந்த மருத்துவ கல்லூரி உள்பட தமிழகத்தில் உள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியை நேற்று ஆய்வு செய்த கலெக்டர் மேகநாதரெட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story