மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்; மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதல்; மூதாட்டி பலி
x
தினத்தந்தி 4 Aug 2021 3:01 AM IST (Updated: 4 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்- பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, இறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 41). இவர் நேற்று முன்தினம் காரில் பெரம்பலூர் அருகே சென்றபோது முன்னால் பெரம்பலூர் மாவட்டம், அய்யலூரை சேர்ந்த மோகன் (65) ஓட்டி சென்ற மோட்டாா் சைக்கிள் மீது கார் மோதியது. தொடர்ந்து சென்ற கார் சாலையோரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த கல்பாடி மெயின்ரோட்டை சேர்ந்த பெருமாள் மனைவி அய்யம்மாள் (65), பெரியசாமி மனைவி துளசியம்மாள் (60) ஆகியோர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story