சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் உடல்கருகிய ஆசிரியை


சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் உடல்கருகிய ஆசிரியை
x
தினத்தந்தி 4 Aug 2021 3:01 AM IST (Updated: 4 Aug 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து ஆசிரியை உடல்கருகினார்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மனைவி சலோமி (வயது 53). இவர் அரும்பாவூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அன்னமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென சேலையில் தீப்பிடித்து மளமளவென பற்றி எரிந்தது. இதையடுத்து சலோமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். மேலும் உடல் கருகிய சலோமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story