புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Aug 2021 3:23 AM IST (Updated: 4 Aug 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

புளியரை சோதனை சாவடியில் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கோட்டை:
தமிழகம்- கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பின்னர் கேரள எல்லை பகுதியான கோட்டைவாசலுக்கும், அதன் அருகில் இருக்கும் கேரள வனத்துறை சோதனை சாவடிக்கும் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், “கேரளாவில் இருந்து வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவார்கள். போலி சான்றிதழ்கள் மூலம் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுசம்பந்தமாக சுகாதாரத்துறை, காவல்துறையினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றார்.

Next Story