கடத்தல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த தாய், மகன் கைது


கடத்தல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த தாய், மகன் கைது
x
தினத்தந்தி 4 Aug 2021 7:11 AM IST (Updated: 4 Aug 2021 7:11 AM IST)
t-max-icont-min-icon

கடத்தல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்

திருச்சி, 

கடத்தல் வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்

விமானநிலையத்தில் இருந்து கடத்தல்

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் நம்பிதாசன் (வயது 50). கப்பல் என்ஜினீயரான இவருடைய மனைவி சீலா என்கிற சசிகலா (40). இவர்களுடைய மகன் கார்த்திகேயன் (21). குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நம்பிதாசனும் சசிகலாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  வெளிநாட்டில் வேலை செய்த நம்பிதாசன் 2016-ம் ஆண்டு திருச்சிக்கு வந்தார். அப்போது விமானநிலையத்தில் இருந்து நம்பிதாசனை அவருடைய மனைவி சசிகலா, மகன் கார்த்திகேயன் ஆகியோர் காரில் சோமரசம்பேட்டைக்கு கடத்தி சென்றனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.

போலீசில் சிக்கினர் 

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசில் நம்பிதாசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிகலா மற்றும் கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் ஜாமீனில் இருந்த தாயும், மகனும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து 2018-ம் ஆண்டு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தாய், மகனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்தநிலையில் சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கி இருந்த 2 பேரையும் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story