மாவட்ட செய்திகள்

6 மாதங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் அதிகரித்த போக்குவரத்து + "||" + After 6 months At the Chennai airport Increased traffic

6 மாதங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் அதிகரித்த போக்குவரத்து

6 மாதங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் அதிகரித்த போக்குவரத்து
சென்னை மீனம்பாக்கம், 6 மாதங்களுக்கு பின்பு சென்னை விமான நிலையத்தில் அதிகரித்த போக்குவரத்து.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா 2-ம் அலையின் பெரும் தாக்குதல் பீதியால் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெகுவாக குறைந்தது. ஒரு நாளுக்கு 60 முதல் 70 வரை விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

ஜூலை மாதத்தில் உள்நாட்டு விமான நிலையத்தில் 140 விமானங்களில் ஒரு நாளுக்கு சுமாா் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோா் பயணித்தனா். இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் தேதி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ஒரே நாளில் 200 விமானங்களில் மொத்தம் 26,400 போ் பயணித்து உள்ளனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் சுமார் 6 மாதங்கள் கழித்து பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், கொச்சி, தூத்துக்குடி, கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.