கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என பஸ்சில் ஏறி கலெக்டர் ஆய்வு
கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என பஸ்சில் ஏறி கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என பஸ்சில் ஏறி கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றியம் ஆவின் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் திருவண்ணாமலை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் குளிரூட்டும் நிலைய அலுவலர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுவதன் அவசியம், முககவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பஸ்சில் ஏறி ஆய்வு செய்த கலெக்டர்
முன்னதாக கலெக்டர் முன்னிலையில் கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஈசான்ய மைதானம் அருகில் பாரத சாரண இயக்கம், தேசிய மாணவர் படை, ஜூனியர் ரெட்கிராஸ், தேசிய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் சாலையில் சென்றவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கபட்டது.
இதனையடுத்து ஈசான்ய மைதானம் வழியாக சென்றவர்களுக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
மேலும் திருச்சி செல்லும் பஸ்சில் ஏறி அரசின் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, பின்னர் முககவசம் அணியாத பயணிகளுக்கு முககவசம் வழங்கி அறிவுரை கூறினார்.
3-ம் பாலினத்தவர்களுக்கு தடுப்பூசி
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துைற அலுவலகத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3-ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. கலெக்டர் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, துணை கலெக்டர் (பயிற்சி) அஜித்தாபேகம், சுகாதாரப் பணிகள் துைண இயக்குனர் அஜித்தா, மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story