கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 3வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் 3-வது அலை கொரோனா பரவலை தடுக்க காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 9-ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்துக்கடை தவிர அனைத்து மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
திருப்பூர் மாநகரத்தில் குமரன் ரோட்டில் ரெயில் நிலையம் முதல் வளர்மதி பாலம் வரை, பழைய பஸ் நிலையம் முதல் தென்னம்பாளையம் போக்குவரத்து சிக்னல் வரை, மங்கலம் ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் சிக்னல் முதல் ஜம்மனை பாலம் வரை, வளர்மதி பாலம் முதல் பழைய பஸ் நிலையம் வரை, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, தாராபுரம் ரோடு சந்திப்பு முதல் ஈஸ்வரன் கோவில் கே.எஸ்.சி. பள்ளி ரோடு வரை,
புதிய மார்க்கெட்
கே.எஸ்.சி. பள்ளி சந்திப்பு முதல் அதியமான் தெரு வரை, கே.எஸ்.சி. பள்ளி சந்திப்பு முதல் பழைய மார்க்கெட் தெரு வரை, புதிய மார்க்கெட் தெரு, புதிய மார்க்கெட் தெரு சந்திப்பு முதல் சென்னை சில்க்ஸ் துளசிராவ் தெரு, காமராஜர் ரோடு சந்திப்பு முதல் புதிய மார்க்கெட் சந்திப்பு வரை, சிக்கண்ண செட்டியார் தெரு, விட்டல்தாஸ் தெரு, ஷார்மியான் சாகிப் தெரு, ஜம்மனை சாலை, காமாட்சியம்மன் தெரு, எம்.ஜி.புதூர் முதல் வீதி முதல் காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பு வரை,
மோகன் லாட்ஜ் முதல் எம்.ஜி.புதூர் வரை, பழைய பஸ் நிலையம் முதல் சி.டி.சி. கார்னர் வரை, வீரபாண்டி மெயின் ரோடு முதல் பள்ளி சந்திப்பு வரை, பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு, நொச்சிப்பாளையம் பகுதி, வீரபாண்டி போலீஸ் நிலைய பகுதி,
பெரிய கடை வீதி
ஆண்டிப்பாளையம் மங்கலம் ரோடு சந்திப்பு, எஸ்.ஆர்.நகர் பிரிவு, கே.வி.ஆர்.நகர் மெயின் ரோடு முதல் மங்கலம் ரோடு ஆர்.ஆர்.தோட்டம் வரை, செல்லம்நகர் சந்திப்பு, நஞ்சப்பா பள்ளி ரோட்டில் நேதாஜி முதல் தெரு முதல் ராயபுரம் பூங்கா வரை, காதர்பேட்டை, கல்லம்பாளையம் ரெயில்வே இணைப்பு வரை, வெள்ளியங்காடு 60 அடி ரோடு முத்தையன் கோவில் முதல் தாராபுரம் ரோடு சந்திப்பு வரை, குப்பாண்டம்பாளையம் பிரிவு வரை, தாராபுரம்ரோடு உஷா தியேட்டர் முதல் திருப்பூர் அரசு மருத்துவமனை வரை ஆகிய பகுதிகளிலும், பல்லடம் நகராட்சியில் என்.ஜி.ஆர்.ரோடு, தாராபுரம் நகராட்சியில் என்.என்.பேட்டை,
பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, உடுமலை ரோடு பழைய பஸ் நிறுத்தம் வரை, சர்ச் ரோடு, ஜவுளிக்கடை வீதி, வசந்தா தியேட்டர் ரோடு, உடுமலை நகராட்சியில் கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, பசுபதி வீதி, ஸ்ரீனிவாசா வீதி, வ.உ.சி.வீதி, கச்சேரி வீதி, ராஜேந்திரா ரோடு வணிக பகுதிகளில் இயங்கும் பால், மருந்துக்கடை, மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள், உணவு பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் விற்பனையை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள்
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களுக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும். அங்கு பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் காவல்துறை உதவியுடன் மேற்கொள்ள வேண்டும்.
சோதனை சாவடி
கேரள-தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனை சாவடி வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா இல்லை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் சோதனை சாவடியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story