மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போடிப்பட்டி:-
மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட ஒரு சில பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமராவதி ஆற்று நீர்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை அமராவதி ஆறு பூர்த்தி செய்துவருகிறது. ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த10 நாட்களுக்கும் மேலாக மடத்துக்குளம் பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் விட்டு ஒருநாள் குறைந்த அளவு தண்ணீரே வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் எந்த நேரத்துக்கு தண்ணீர் வரும் என்று தெரியாமல் தண்ணீர் குழாய்க்கு அருகில்தவமிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரவுத் தூக்கத்தைத் தொலைத்து பலரும் அதிகாலை முதலே தண்ணீருக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆற்றில் வெள்ளம்
தற்போது அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் ஆற்றில் திறந்து விடுமளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் ஆற்றில் வெள்ளம் போனாலும் எங்களுக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்காத நிலையே உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அழுத்தம் குறைவு என ஏதேதோ காரணம் சொல்கிறார்கள்.
எனவே இந்த பகுதிக்கு சீரான வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும்.மேலும் இந்த பகுதிக்கு திருமூர்த்தி கூட்டு குடிநீர்த் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்'என்று பொதுமக்கள்கூறினர்.
Related Tags :
Next Story