மடத்துக்குளம் பகுதியில் உள்ள முக்கிய வழித்தடம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

மடத்துக்குளம் பகுதியில் உள்ள முக்கிய வழித்தடம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
x
தினத்தந்தி 4 Aug 2021 9:59 PM IST (Updated: 4 Aug 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் பகுதியில் உள்ள முக்கிய வழித்தடம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் உள்ள முக்கிய வழித்தடம் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
சமூக விரோதிகள்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பெரிய வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைஉள்ளது. இந்த சாலை குறுகியதாக இருந்தாலும் அதிக அளவிலான மக்கள் பயன்படுத்தி வந்தனர். அதேநேரத்தில் இந்த பகுதியிலிருந்து சற்று தொலைவிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் சிக்காமல் தப்ப நினைக்கும் சமூக விரோதிகளும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
 இதனையடுத்து சமீபத்தில் இந்த சாலையை போலீசார் தடுப்புகள் வைத்து முழுமையாக அடைத்து விட்டனர். இதனால் இந்த பகுதிக்கு உள்ளே இருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு எதிரேயுள்ள மற்றொரு சாலையைப் பயன்படுத்தி வந்தனர்.
 போலீஸ் சோதனை சாவடி
ஆனால் அந்த பகுதியில் நடைபெற்று வரும் தனியார் உணவகம் கட்டுமானப் பணிகளுக்கான இடுபொருட்கள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அடிக்கடி இந்த சாலையில் கொட்டப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கட்டிடக் கழிவுகள் மற்றும் கட்டுமானப் பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சமூக விரோதிகளை முழுமையாக கட்டுப்படுத்த ஆரம்ப காலங்களில் இருந்தது போல போலீஸ் சோதனை சாவடியை திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியான அமராவதி ஆற்றுப் பாலத்துக்குஅருகில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் சாலை அடைக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்க முடியும். அத்துடன் மாவட்ட எல்லையில் முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என சமூக ஆர்வலர்கள் கூறினர். 

Next Story