செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு
செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பொறுப்பேற்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த செந்தில்குமார் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த செ.கு.சதீஷ்குமார் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
நேற்று காலை திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக செ.கு.சதீஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அவர், கலெக்டர் வினீத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் சக ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
Related Tags :
Next Story