180 பேருக்கு கொரோனா தடுப்பூசி
180 பேருக்கு கொரோனா தடுப்பூசி
முத்தூர்:
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஆகிய 4 ஊராட்சிக்குட்பட்ட 80 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் வரும் முன் காத்திடும் தடுப்பாக
2-வது தவணை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை போட்டனர்.
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மொத்தம் 100 பேருக்கு 2-வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போட்டனர்.
Related Tags :
Next Story