அரிச்சந்திரா ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்
தலைஞாயிறு பகுதியில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற அரிச்சந்திரா ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
வாய்மேடு:
தலைஞாயிறு பகுதியில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற அரிச்சந்திரா ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
வறண்டு காணப்படும் வயல்கள்
கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த காடந்தேத்தி, மணக்குடி, பிரிஞ்சுமூலை, ஆய்மூர், வடுகூர் உள்ளிட்ட பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்தனர். கடந்த 50 நாட்களாக வளர்ந்த குறுவை பயிர்கள் தற்போது கதிர் விடும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் வறண்டு காணப்படுகிறது.
கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்
இதனால் விவசாயிகள் ஆயில் என்ஜின் மூலம் ஆற்றில் தண்ணீரை இறைத்து குறுவை சாகுபடியை காப்பாற்ற போராடி வருகின்றனர். ஆனாலும் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கருகி வரும் அவலம் உள்ளது.
இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற அரிச்சந்திரா ஆற்றில் கூடுதலான தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story