ஆம்பூர் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்தில் 12 பேர் காயம்
அடுத்தடுத்து நடந்த விபத்தில் 12 பேர் காயம்
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை தனது ஆட்டோவில் 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை கடந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (26) மகாலட்சுமி (24)
தேவஸ்ரீ (2) முத்துக்குமார் (46), இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மின்னூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் (17), ஆட்டோ டிரைவர் சிவகுமார் (45) உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
அதேபோல் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வேலூர் மாவட்டம் வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிய போது மின்னூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில் காரில் பயணித்த ராஜ் (45), ஹரி (42), பிரியா (28), செந்தில்குமார் (35), ரங்கநாதன் (48) உள்பட 6 பேரும் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story