உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ள சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யக்கூடிய நவீன எந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ள சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யக்கூடிய நவீன எந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 4 Aug 2021 10:59 PM IST (Updated: 4 Aug 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ள சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யக்கூடிய நவீன எந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

போடிப்பட்டி:
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ள சூடான காற்று மூலம் கொப்பரை உற்பத்தி செய்யக்கூடிய நவீன எந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொப்பரை உற்பத்தி
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள விவசாயிகள் தேங்காய், இளநீர் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். அதேநேரத்தில் கொப்பரை, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். 
ஆனால் அதற்கான உலர்களங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்குவதற்கு அதிக செலவு பிடிப்பதால் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே கொப்பரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொப்பரை உற்பத்தியை எளிமைப்படுத்தும் விதமாக, சூடான காற்று மூலம் அதிக பட்சம் 2 நாட்களுக்குள் கொப்பரை உற்பத்தி செய்யும் வகையிலான நவீன எந்திரம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
பயன்பாட்டுக்கு வந்தது
நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு வராமலிருந்த இந்த எந்திரத்தை விவசாயிகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று நமது தினத்தந்தி நாளிதழில் கடந்த 30 ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். இதனையடுத்து நேற்று இந்த எந்திரம் விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் விளைந்த தேங்காய்களை மட்டை உரித்து முழுதாக இங்கே கொண்டு வந்தால் போதும்.அதனை நவீன எந்திரம் மூலம் மிகக் குறைந்த நேரத்தில் 2 துண்டுகளாக உடைத்துக் கொள்ளலாம்.
பின்னர் அதனை ஹாட் சேம்பர் எனப்படும் உலர்த்தும் அறையில் போடவேண்டும்.ஒரு அறையில் ஒரு நேரத்தில் 5 ஆயிரம் தேங்காய்களை உலர வைக்க முடியும்.காற்றை சூடாக்குவதற்கு எரிபொருளாக விறகுகளைப் பயன்படுத்த வேண்டும்.தோட்டத்திலுள்ள தென்னை மட்டை, தேங்காய் மட்டை உள்ளிட்ட பண்ணைக் கழிவுகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.சூடான காற்று மூலம் 6 முதல் 8 மணி நேரத்தில் தேங்காய் உலர்ந்து விடும்.பின்னர் அதனை தொட்டியிலிருந்து எடுத்து மீண்டும் உலர்த்தும் அறையில் போட வேண்டும்.அடுத்த 8 மணி நேரத்தில் சரியான பக்குவத்தில் கொப்பரை தயாராகி விடும்.
மிகக்குறுகிய நேரத்தில்சல்பர் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன்படுத்தாமல் சுத்தமான கொப்பரை உற்பத்தி செய்வதற்கு இந்த எந்திரம் உதவியாக இருக்கும்.இந்த கொப்பரை உற்பத்தி எந்திரத்தை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகலாம்.
இவ்வாறு  அதிகாரிகள் கூறினர்.

Next Story