தியாகதுருகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் 2 பேர் கைது
தியாகதுருகத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல் 2 பேர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் உதயமாம்பட்டு சாலையில் உள்ள மளிகை கடைக்கு சென்றனர். அப்போது கடையின் முன்பு நின்று கொண்டிருந்த மர்மநபர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அருகே கீழ் நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார்(வயது 49) என்பதும், இவர் மளிகை கடையில் இருந்து 150 பாக்கெட் புகையிலை பொருட்களை வாங்கி கீழ் நாரியப்பனூரில் உள்ள தனது பெட்டி கடையில் விற்பனைக்காக கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து மளிகை கடையில் சோதனை நடத்தியபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலை கொளத்து மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த அன்பழகன்(41) என்பவரை கைது செய்த போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி முன்னிலையில் மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story