மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு + "||" + Corona vulnerability

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை, ஆக.5-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது.
42 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்திருந்தது. தினமும் சராசரியாக 20 முதல் 25 வரை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 39 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 568 ஆக உயர்ந்தது.

ஒருவர் சாவு
கொரோனாவுக்கு தற்போது 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா 3-வது அலை உருவாக கூடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமெரிக்காவில் 57,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு; இலங்கையில் பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரம் கடந்துள்ளது.
3. இந்தியாவில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 30,773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உலக அளவில் 22.88 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைவு
தமிழகத்தில் நேற்று 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.