உளுந்தூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல் மின்வாரிய ஊழியர் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு


உளுந்தூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல் மின்வாரிய ஊழியர் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 4 Aug 2021 11:06 PM IST (Updated: 4 Aug 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல் மின்வாரிய ஊழியர் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் குடும்பத்துக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் அரிவாள், கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் கலைவாணன் மற்றும் அவரது அண்ணனும், மின்வாரிய ஊழியருமான கலைமணி, மதியழகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 

இதுபற்றிய தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story