புகையிலை, குட்கா, பான்மசாலா விற்றால் கடைக்கு சீல். அதிகாரி எச்சரிக்கை


புகையிலை, குட்கா, பான்மசாலா விற்றால் கடைக்கு சீல். அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2021 5:52 PM GMT (Updated: 2021-08-04T23:22:51+05:30)

புகையிலை, குட்கா, பான்மசாலா விற்றால் கடைக்கு சீல்

வேலூர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. கலெக்டர்கள் உத்தரவின்பேரில் உணவு பாதுபாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி மற்றும் பலர் கடந்த சில நாட்களாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகள், குடோன்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அதில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 40 கடைகளுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. அதிகளவு புகையிலை, குட்கா, பான்மசாலா வைத்திருந்த கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு முதல் கட்டமாக நோட்டீசு மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி  விற்பனை செய்தால் அந்தக் கடைக்கு 'சீல்' வைக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440-42322 என்ற செல்போன் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Next Story