காப்பகத்தில் இருந்த சிறுமி மீண்டும் கடத்தல்


காப்பகத்தில் இருந்த சிறுமி மீண்டும் கடத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2021 12:44 AM IST (Updated: 5 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமியை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி, ஆக.5-
காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமியை கடத்திச் சென்று விட்டதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறுமிக்கு திருமணம்
புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அன்பு (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.   இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டு தவளக்குப்பத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அங்கு சாப்பாடு சரியில்லை என்று அவர் கூறியதால் கடந்த சில நாட்களுக்கு முன் புதுவையில் உள்ள கான்வெண்டுக்கு மாற்றப்பட்டார். சிறுமியை அவரது தந்தை நாள்தோறும் சென்று பார்த்து வந்துள்ளார்.
கடத்தல்
இந்தநிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மீண்டும் கான்வெண்டில் கொண்டு வந்துவிட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்து அவர் மாயமாகி விட்டார்.
அவரை வாலிபர் அன்புதான் மீண்டும் கடத்தி சென்று இருக்கவேண்டும் என்றும், சிறுமியை மீட்டு தரவேண்டும் என்றும் அவரது தந்தை ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். 
அதன்பேரில் சிறுமியை கடத்தியதாக அன்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story