புதுவைக்கு கூடுதல் நிதி கேட்க சபாநாயகர் செல்வம், நமச்சிவாயம் டெல்லி சென்றனர்


புதுவைக்கு கூடுதல் நிதி கேட்க  சபாநாயகர் செல்வம், நமச்சிவாயம் டெல்லி சென்றனர்
x
தினத்தந்தி 5 Aug 2021 12:44 AM IST (Updated: 5 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய மந்திரிகளை சந்தித்து புதுவைக்கு கூடுதல் நிதி கேட்க சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றனர்.

புதுச்சேரி, ஆக.5-
மத்திய    மந்திரிகளை சந்தித்து புதுவைக்கு கூடுதல் நிதி கேட்க சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
டெல்லி பயணம்
புதுவை      சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் டெல்லியில் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர்.
புதுவையில் புதியதாக சட்டசபை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.  இதற்காக மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் நடத்திய கலந்துரையாடலின்போது சபாநாயகர் செல்வம் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவரை நேரில் சந்தித்து நிதி கேட்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
கூடுதல் நிதி..
மேலும் உள்துறை மந்திரி அமித்ஷாவையும் சந்திக்க உள்ளனர். அப்போது புதுவை மாநிலத்துக்கு கூடுதல் நிதி வழங்குவது, நிர்வாகம் தொடர்பாக பேச உள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய நிதி, கல்வி, தொழில், மின்துறை மந்திரிகளை சந்திக்க உள்ளனர். அவர்களிடம் மின்துறையை தனியார் மயமாக்குவதில் உள்ள      பிரச்சினைகள், கல்வி, தொழில் ஆகிய துறைகளுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மானிய உதவிகள்,    அவற்றுக்கு  கூடுதல் நிதி     பெறுவது   குறித்து   பேச உள்ளனர்.
ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை
மேலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் அவர்கள் சந்தித்து புதுவை மாநிலத்துக்கான கடன் தள்ளுபடி, ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை வழங்குவது குறித்து வலியுறுத்த உள்ளனர்.
டெல்லியில் 2 நாட்கள் முகாமிடும்  சபாநாயகர்   செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் மேலும் சில மத்திய மந்திரிகளையும், பா.ஜ.க. மேலிட தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.


Next Story