3 குழந்தைகளுடன் ஆதரவின்றி தவிக்கும் பெண்


3 குழந்தைகளுடன் ஆதரவின்றி தவிக்கும் பெண்
x
தினத்தந்தி 5 Aug 2021 1:41 AM IST (Updated: 5 Aug 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு கணவர் பலியானதால் 3 குழந்தைகளுடன் பெண் ஆதரவின்றி தவித்து வருகிறார்.

ஏர்வாடி:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்தவர் பொன் கண்ணன் (வயது 35). கூலி தொழிலாளியான இவரது மனைவி மகேஷ்வரி (29). இவர்களுக்கு அபிஷா மாலினி (7), மானிஷா (6), அனிஷா (4) ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பொன் கண்ணன் கொேரானாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் உயிரிழந்தார். இதனால் மகேஷ்வரி தனது குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்து வருகிறார். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து மகேஷ்வரி கூறுகையில், ‘கணவர் உழைப்பின் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு காலத்தை கழித்து வந்தோம். தற்போது அவர் இறந்து விட்டதால் நாங்கள் வருமானமின்றி தவித்து வருகிறோம். அன்றாட செலவுக்கு கூட வருமானம் இல்லாமல் இருக்கிறோம். 3 பெண் குழந்தைகளின் கல்விக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எந்தவித ஆதரவும் இன்றி நிர்கதியாகி உள்ளோம். எனவே தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை வழங்க வேண்டும். மகள்களின் கல்விக்கும் வழிவகை செய்ய வேண்டும்’ என்றார். 

Next Story