திருமண தரகரை காரில் கடத்தி நகை பறித்த 3 பேர் கைது


திருமண தரகரை காரில் கடத்தி நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2021 1:48 AM IST (Updated: 5 Aug 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் திருமண தரகரை காரில் கடத்தி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி யாதவர் மேலத்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75). திருமண தரகர். இவரை கடந்த 21-1-2021 அன்று 3 பேர் சந்தித்து, காவல்கிணறு பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறி நாகர்கோவிலுக்கு காரில் அழைத்து சென்று உள்ளனர். பின்னர் திரும்பி வரும் வழியில் கந்தசாமியை கழுத்தை நெரித்தும், கம்பால் தாக்கியும் அவர் அணிந்திருந்த 23 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் அவரை காவல்கிணறு ரெயில்வே மேம்பாலம் அருகே காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்று விட்டனர். 

இதுகுறித்து கந்தசாமி பணகுடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் நகையை பறித்தவர்கள் சென்னைக்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த வள்ளியூரை சேர்ந்த எல்கான்தாசன் (28) பணகுடியை சேர்ந்த சபரி வளவன் (20), பாம்பன்குளத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (50) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் தங்க நகைகளை மீட்டதுடன் காரை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.

Next Story