பணகுடி அருகே ரூ.6 கோடியில் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்


பணகுடி அருகே ரூ.6 கோடியில் தார் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2021 2:06 AM IST (Updated: 5 Aug 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே ரூ.6 கோடி செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை சபாநாயகர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்.

பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு முதல் மண்பொத்தை சாலை வரை, வடக்கன்குளம் முதல் மேலகிளாக்குளம் சாலை வரை, நக்கனேரி முதல் ஊரல்வாய்மொழி சாலை வரை சுமார் ரூ.6 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., வழக்கறிஞர் சேவியர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தனது சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பில் கொரோனா தடுப்பூசி முகாமை சபாநாயகர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘மருத்துவ துறையினர் வீட்டுக்கு வந்து மக்களை நேரில் சந்தித்து பரிசோதனை செய்ய உள்ளனர். இதுபோல மக்களை பாதுகாக்கும் அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கொரோனா கால கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொண்டு மக்களை பாதுகாத்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ துறையினர் மற்றும் செவிலியர்கள் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். மக்கள் எந்த ஒரு குறை வந்தாலும் என்னை அணுகலாம். அந்த குறைகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்’ என்றார். முகாமில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story