வீணாகும் குடிநீர்
அருப்புக்கோட்டை குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்தரையர் நகர் வரை ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பசும்பொன் நகரில் இருந்து காமராஜர் நகர் வரை ரூ.4 லட்சம் மதிப்பிலும், அதே போல் ஏ.டி. காலனியில் இருந்து முத்தரையர் நகர் வரை புதிதாக குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. ஆனால் குழாய்கள் பதித்த சில நாட்களில் ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும் குழாய் பதித்த பின் தோண்டப்பட்ட சாலைகளை சரியாக மூடாமல் அரைகுறையாய் விட்டுச்சென்றதால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குழாய் உடைப்புகளை சரிசெய்வதோடு சாலைகளையும் சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story