திருச்சி ஜங்ஷனில் இருந்து பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை
திருச்சி ஜங்ஷனில் இருந்து பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷனில் இருந்து பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு ரெயில்
தெற்கு ரெயில்வே தற்போது கொரோனா தொற்று காலத்தையொட்டி, சிறப்பு ரெயில்களை மட்டுமே இயக்கி வருகிறது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பாசஞ்சர் ரெயில்களை இயக்கவில்லை.
அதே வேளையில் திருச்சி ரெயில்வே கோட்டம் ரெயில்வேயில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்காக மட்டும் 2 அல்லது 3 பெட்டிகளுடன் கூடிய ரெயில்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்சி ஜங்ஷனுக்கு சிறப்பு ரெயில் இயக்கி வருகிறது.
பயணிகள் ரெயில்
இந்த நிலையில் ரெயில்களில் சீசன் டிக்கெட் எடுத்து பணி நிமித்தமாக தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு தினமும் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மீண்டும் பாசஞ்சர் ரெயில்களை(பயணிகள் ரெயில்) இயக்க வேண்டும் என திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தஞ்சாவூரிலிருந்து திருச்சி மற்றும் திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு வழக்கமான போக்குவரத்திற்காகவும், தினசரி எங்கள் அலுவலகங்கள் மற்றும் வீடு திரும்புவதற்கும் பாசஞ்சர் ரெயில்களை பயன்படுத்துகிறோம். ஆனால், கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல், கொரோனா காரணமாக, அந்த ரெயில்களின் வழக்கமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சிரமாக உள்ளது
இப்போது அலுவலகங்கள் ஊழியர்களின் முழு பலத்துடன் செயல்படுகின்றன. நாங்கள் எங்கள் போக்குவரத்து முறையை பஸ் சேவைக்கு மாற்ற வேண்டியதாக உள்ளது. இது எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஏனெனில் இருக்கை வசதி, டிக்கெட் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் சிரமாக உள்ளது.
எனவே, திருச்சியில் இருந்து காரைக்கால், திருச்சியில் இருந்து மயிலாடுதுறை, மன்னார்குடியில் இருந்து திருச்சி, மயிலாடுதுறையில் இருந்து திருச்சி மற்றும் திருச்சியில் இருந்து மன்னார்குடிக்கு பாசஞ்சர் ரெயில்களின் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story