கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்


கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்
x
தினத்தந்தி 5 Aug 2021 2:24 AM IST (Updated: 5 Aug 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு புளியரை சோதனை சாவடியில் இன்று முதல் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வருபவர்களை தமிழக- கேரளா எல்லையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.ே கரளாவில் நேற்றும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. 

இதனால் கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்று கட்டாயம் வைத்திருக்கவேண்டும். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள கொரோனா தடுப்பு மருத்துவ சோதனைச்சாவடியில் நேற்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வாகனங்களில் வரும் நபர்களிடம் கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் காண்பித்து கொேரானா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டு, துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டது. மேலும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை நடத்தப்பட்டது.

Next Story