இருதரப்பினர் மோதல்; 13 பேர் கைது
ஆலங்குளத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் நத்தம் பகுதியில் சம்பவத்தன்று இரவு சில வாலிபர்கள் மதுபோதையில் அங்குள்ள பெண்களிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனை அங்குள்ள சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து தனிப்படை போலீஸ் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆலங்குளத்தை சேர்ந்த சிம்சோன் ராஜ் மகன்கள் சதீஷ் (வயது 26), ரதிஷ் (24), ராஜன் மகன் அரவிந்த் (24), ஆசிர்வாதம் மகன் முத்துச்செல்வம் (20), ஜெகநாதன் மகன் சதீஷ் (21), ஆறுமுகராஜ் மகன் அதிபன் (19), பால் டேவிட் மகன் முகிலன் ஜோன்ஸ் (21), கணேஷ் மகன் சூரன் (22), கண்ணன் மகன் சிவா (19), பால்ராஜ் மகன் அலெக்சாண்டர் (23), வைத்திலிங்கம் மகன் மணிகண்டன் (25), தேவராஜ் மகன் அஜித்குமார் (24), ராஜா மகன் செல்வமயில் (19) ஆகியோர் மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story