குமரியில் இன்று கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று 11 இடங்களில் நடக்க இருப்பதாக கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் இன்று 11 இடங்களில் நடக்க இருப்பதாக கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 இடங்களில் முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) 11 இடங்களில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடக்கிறது. அதாவது நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளி, டி.வி.டி. பள்ளி ஆகியவற்றில் நடக்கும் முகாமில் அனைத்து வயதினருக்குமான கோவேக்சின் 2-வது தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இதேபோல் செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றில் நேரடி டோக்கன் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசி அனைத்து வயதினர் மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கும் போடப்படுகிறது.
கோவேக்சின் தடுப்பூசி
மேலும் இரவிபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குருந்தன்கோடு, குட்டக்குழி, கிள்ளியூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் மூலம் அனைத்து வயதினருக்கும் கோவேக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகின்றன.
வெளிநாட்டுக்கு செல்வோருக்கான கோவேக்சின் 2-வது டோஸ் நேரடி டோக்கன் மூலம் கோட்டார் கவிமணி பெண்கள் பள்ளியில் செலுத்தப்படுகிறது.
அபராதம்
குமரியில் நேற்று தொற்று விதிகளை மீறியதாக 612 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மாவட்டம் முழுவதிலும் 136 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story